தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜயின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காவேரி இரத்த மையத்தில் (KMC) திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் சார்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் திருச்சி ஆர்.கே.ராஜா தலைமையில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளரும் தண்ணீர் அமைப்பின் செயல் தலைவருமான கே.சி .நீலமேகம். தண்ணீர் அமைப்பின் செயலாளர் பேராசிரியர் கவிஞர் சதீஷ்குமார் ஆகியோர் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார்கள்.
இதில் காவேரி இரத்த மைய அதிகாரி டாக்டர் சதீஷ், காவிரி இரத்த மைய பிஆர்ஓ மனோஜ், தளபதி விஜய் ரசிகர்கள் ஜீவா, பெரிய மிளகு பாறை சுப்பிரமணி தொட்டியம் பாரதிராஜா, சுஜன் , கார்த்திக், லால்குடி கலைவாணன் , உறையூர் சரண்ராஜ் , மஞ்சத் திடல் சிவா , மண்ணச்சநல்லூர் சுரேஷ் , கலைவாணன் , புத்தூர் நடராஜ் , பாபு , பெல் பரத் , சமயபுரம் ஈச்சம்பட்டி சிவா , இனாம் புதூர் தனசேகர் உள்பட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்று ரத்தம் தானமாக வழங்கினர் .