திருச்சி தில்லைநகரில்
தீயில் கருகி பெண் பரிதாப சாவு
போலீசார் விசாரணை
கர்நாடகா மாநிலம் மைசூர் யாதவகிரி பகுதியை சேர்ந்தவர் குமரவேல் .
இவரது மனைவி பிரசன்னகுமாரி (வயது 66).இவர் உடல்நிலை சரியில்லாமல் திருச்சியில் உள்ள தனியார் மனநிலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 1 ந்தேதி அந்த மருத்துவமனையில் உள்ள பூஜை அறைக்கு பிரசன்னகுமாரி சென்றார். அப்பொழுது அங்குள்ள பூஜை விளக்கிலிருந்து தீ அவரது சேலையில் பட்டு தீ பிடித்தது. இந்த தீ விபத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்த பிரசன்னகுமாரி ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி பிரசன்ன குமாரி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.