மணச்சநல்லூர் அருகே
காதலனுடன் விஷம் குடித்த கல்லூரி மாணவி பரிதாப சாவு.
காதலனுக்கு தீவிர சிகிச்சை
கரூர் மாவட்டம் புகளூர்
மொஞ்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் வரதன் (வயது 55) இவரது மகள் கார்த்திகா (வயது 17). இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில்
இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவருக்கும் திருச்சி மணச்சநல்லூர் அருகே உள்ள வாளையூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (வயது 25) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இரண்டு பேரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.
பழனிச்சாமி தனது சொந்த சகோதரரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதை அறிந்த கார்த்திகாவின் பெற்றோர் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருந்த போதிலும் கார்த்திகா காதலனை கரம் பிடிப்பதில் உறுதியாக இருந்து உள்ளார். மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கார்த்திகா காதலனுடன் ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் காதலியை அவர் திருமணம் செய்ய முயன்றுள்ளார்.
ஆனால் 18 வயது நிரம்பாததால் திருமண திட்டம் கைவிடப்பட்டது.
அதன் பின்னர் கார்த்திகாவை அவரது பெற்றோர் மீண்டும் கரூருக்கு அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி மீண்டும் கார்த்திகா தனது காதலனை தேடி வாழையூர் வந்தார்.
பின்னர் காதலர்கள் ஜோடியாக அங்கிருந்து வெளியே புறப்பட்டு சென்றனர்.
பின்னர் மாலையில் அங்குள்ள காட்டுப் பகுதியில் பழனிச்சாமியும் கார்த்திகாவும் விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.
உடனே அவர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று சிறுவாச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரண்டு பேரையும் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் கார்த்திகா பெற்றோர் மகளை கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கே டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் கார்த்திகா நேற்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்
. பழனிச்சாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறும் போது,
கார்த்திகாவின் காதலுக்கு முதலில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பின்னர் மகளின் உறுதியை பார்த்து எதிர்ப்பை கைவிட்டு உள்ளதாக தெரிகிறது.
ஆனால் தற்போது திடீரென காதல் ஜோடி விஷம் குடித்ததற்கான காரணம் தெரியவில்லை என்றனர்.