திருச்சி புத்தூர் பகுதியில் அதிமுக டிஜிட்டல் பேனர் கிழிப்பு.
நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார்.
திருச்சி புத்தூர் அக்ரஹாரம் அருகில் உள்ள சுவரில் திமுக,அதிமுக சார்பில் தனி தனியாக டிஜிட்டல் பேனர் நேற்று வைக்கப்பட்டு இருந்தது.அந்த பேனரில் 2026 முதல் தமிழகத்தின் நிரந்த முதல்வர் எடப்பாடியார் என்று வாசகம் எழுதப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அந்த பேனரை இரவு மர்ம ஆசாமிகள் சிலர் கிழித்து விட்டனர்.இது தொடர்பாக புத்தூர் பகுதி அதிமுக செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் வட்டச்செயலாளர் பாலையா (எ) பாலமுருகன் முன்னிலையில் நிர்வாகிகள்
உறையூர் போலீசில் புகார் கொடுத்தனர்.
மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம வாலிபர் ஒருவர் டிஜிட்டல் பேனரை கிழிப்பது போன்ற காட்சி பதிவாகி உள்ளது.அந்த வீடியோ காட்சியையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் அதிமுக டிஜிட்டல் பேனரை கிழித்த மர்ம
ஆசாமி யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் புத்தூர் பகுதி அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.