குடும்ப உறவுகளை சிதைக்கும் கள்ளக்காதல் கொடூரங்கள் நாளைக்கு நாள் நடந்து கொண்டே இருக்கிறது . சம்பந்தமே இல்லாமல் தம்பதிகளை குழந்தைகள் எதிர்காலம் தொலைந்து வருகிறது.
தற்போது கரூரில் நடந்துள்ள கொடூர சம்பவம். இது சம்பந்தமான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள் என்றாலும், அதிர்ச்சி இன்னமும் அடங்கவில்லை.
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ்( 41 வயது) கரூரில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் மாத சம்பளத்துக்கு வேலை பார்த்து வருகிறார்
இவரது மனைவி அம்சாவுக்கு (வயது 35) இவரது வீட்டுக்கு பக்கத்தில் சிவக்குமார் (வயது 35) என்ற நபர் வாடகைக்கு குடிவந்து உள்ளார். மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். வாடகை வீட்டில் தனியாக தங்கியிருந்தார் சிவக்குமார்.
இந்நிலையில், பக்கத்து வீட்டில் குடியிருந்த அம்சாவுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு தகாத உறவாக மாறியிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே, அம்சாவுக்கும் இந்த உறவு நீடித்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு, வேலை முடிந்து ரமேஷ் வீட்டிற்கு வந்தபோது, அம்சாவுடன், சிவக்குமார் தனிமையில் உல்லாசமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிவக்குமாரிடம் தகராறு செய்துள்ளார் ரமேஷ். ஆனால், இருவருக்குமே வாக்குவாதமும், தகராறும் வெடித்துள்ளது. இது ஒருகட்டத்தில் கைகலப்பு வரை சென்றது.
இறுதியில் ஆத்திரமடைந்த ரமேஷ், வீட்டிலிருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து சிவக்குமாரை பலமாக தாக்கி உள்ளார். கம்பியால் ஓங்கி அடித்ததில், தலை, வயிறு, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சுருண்டு விழுந்து இறந்துவிட்டார் சிவக்குமார்.
இந்த தகவலறிந்த க.பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவக்குமாரின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கரூர் அரசு மருதத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து, கரூர் ஜெயிலிலும் அடைத்துள்ளனர்..
குடும்ப உறவுகளை சிதைக்கும் கள்ளக்காதல் தொடர்பான கொலைகள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற கொலைகளில் சம்பந்தப்பட்டோருக்கு ஆயுள் தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்பதால், அதுபோன்ற குற்றங்களில் ஈடுபட வேண்டாம் என்று காவல்துறை பலமுறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதன்மூலம், கணவன், மனைவி மட்டுமல்லாமல், அவர்களது குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.. அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் சூழலுக்கு சென்றுவிடுகிறது..
கள்ளக்காதல் விவகாரத்தில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை நிச்சயமாக கிடைக்கும்.. இதுபோன்ற திட்டமிட்டக் கொலைகளுக்கு, சட்ட ரீதியாக வழங்கப்படும் தண்டனைகள் பலருக்கும் தெரிவதில்லை என்பதால்தான், இதுபோன்ற படுகொலைகள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.