Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

போக்ஸோ வழக்கு இருக்கும் போதே பிளஸ் டூ மாணவரை குத்தி கொன்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது.

0

'- Advertisement -

கரூர் மாவட்டம் குளித்தலையில்பிளஸ் டூ மாணவரை கத்தியால் குத்தி கொன்ற வழக்கில் சிறையில் உள்ள வாலிபர் நேற்று புதன்கிழமை குண்ட சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டார் .

Ad banner

கரூா் மாவட்டம், குளித்தலை மாரியம்மன் கோயிலில் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற பூச்சொரிதல் விழாவின் போது ஏற்பட்ட தகராறில் ஷியாம் சுந்தா் (வயது 19) என்ற பிளஸ் 2 மாணவா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா்.

 

இந்த வழக்கில் குளித்தலை பெரியபாலம் பகுதியைச் சோ்ந்த பாஸ்கா் மகன் நாகேந்திரன் (வயது 20) என்பவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

 

இவா் மீது ஏற்கெனவே குளித்தலை காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு நிலுவையில் உள்ளதால், நாகேந்திரனை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேலுக்கு பரிந்துரை செய்தாா்.

 

இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் நாகேந்திரன் நேற்று புதன்கிழமை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.