திருச்சி லவ்லி பேன்சி இல்ல திருமண விழா: அமைச்சர்கள் நேரு,மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்து.
திருச்சி லவ்லி ஃபேன்சி குழுமத்தின் தலைவரும் தமிழ்நாடு மொபைல் விற்பனையாளர் சங்க மாநில துணைத்தலைவருமான ஜலாலுதீன் அவர்கள் உடன் பிறந்த சகோதரரின் மகன் ஹீமான் – இர்பானா சித்திக்கா ஆகியோரின் திருமணம் திருச்சி அரிஸ்டோ திருமண மண்டபத்தில் நடைபெற்றது .
இவ்விழாவிற்கு திமுக முதன்மை செயலாளரும். நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் , பள்ளிக் கல்வித் துறை அமைச்சரமான மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார் .
மேலும் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திவ்யா தனக்கோடி , திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி , பகுதி செயலாளர் மோகன் தாஸ் , கவுன்சிலர்கள் ரெக்ஸ் , ராமதாஸ் உட்பட பலர் மணமக்களை நேரில் வாழ்த்தி சென்றனர் .
நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும்
லவ்லி உணவகம் – சிங்கப்பூர், கனி மெடிக்கல் – காரடர்ந்தகுடி, மீனாட்சி மெடிக்கல் – நயினார்கோவில்
ஹஃபாஸ் பல் மருத்துவமனை – இராமநாதபுரம். மற்றும் லவ்லி பேன்ஸி – திருச்சி சார்பில் ஜலாலுதீன் மற்றும் பைசல் ஆகியோர் வரவேற்றனர் .