தமிழக ஆளுநர் ஆர் என். ரவி நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை.2 நாள் கோவில்களில் வழிபாடு
தமிழக ஆளுநர் ஆர் என். ரவி நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை.
திருவரங்கம், திருவானைக்காவல் கோவில்களில் வழிபாடு நடத்துகிறார்
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நாளை (மே 29 – ந் தேதி) திருச்சி வருகை தரவுள்ளார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் நாளை (வியாழக்கிழமை) திருச்சி வரும் அவர், திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மற்றும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் தரிசனம் செய்கிறார். தொடர்ந்து இரவு தங்கி ஓய்வெடுக்கும் அவர், மறுநாள் வெள்ளிக்கிழமை (30 ஆம் தேதி) காலை, திருச்சி குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து அவர் மதுரைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.