திருச்சி அரியமங்கலத்தில் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் விபரம்… நடவடிக்கை எடுப்பார்களா? உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள்.
திருச்சியில் பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசிகளை கடத்தி விற்பனை செய்து வரும் நபர்களை ரேஷன் அரிசி உணவுப்பொருள் கடத்த தடுப்பு பிரிவு போலீசார் அவ்வபோது கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர் .
ஆனாலும் சிலர் அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி அரிசி மற்றும் ரேஷன் பொருட்களை கடத்தி விற்பனை செய்து வருகின்றனர் .

தற்போது திருச்சி அரியமங்கலத்தில் (வார்டு எண் 37 ) நேருஜி நகர். ஜோசப் கிருஷ்ணன் தெருவை சேர்ந்த டைலர் ராஜு என்பவர் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசிகளை கூடுதல் விலை கொடுத்து வாங்கி மாவாக அரைத்து காட்டூர், அரியமங்கலம் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மற்றும் சிறிய டிபன் கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார் .
இதேபோன்று வடக்கு உக்கடை பள்ளிக்கூடத் தெரு பகுதியை சேர்ந்த ஈஸ்டர்ன் ராஜ் என்பவர் அரியமங்கலம் காட்டூர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, துவரம் பருப்பு , பாமாயில், கோதுமை போன்ற பொருட்களை வாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் அதிக விலைக்கு விற்று வருகிறார்.
இந்த தகவல் உணவு தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கும் அவர்கள் உங்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள் ஏனென்றால் நாங்கள் அவர்களுக்கு முறையான மாமல் கட்டி வருகிறோம் என தெனாவட்டாக கூறி வருகிறதாம் இந்த இருவரும். இந்த தகவல் உணவு தடுப்பு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியுமா