தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் 1000 கோடி அல்ல 50 ஆயிரம் கோடி ரூபாய். விரைவில் பல அமைச்சர்கள் கைது ஆவார்கள் . திருச்சி சூர்யா
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் பணம் சபரீசனுக்கு சென்றுள்ளது . இதற்காக சபரிசனுக்கும் உதயாநிதி ஸ்டாலினுக்கும் அமலாக்கத்துறை விரைவில் நோட்டீஸ் அனுப்பவுள்ளது என திருச்சி சூர்யா கூறியுள்ளார் .
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளனர், என்று திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.
திருச்சி சூர்யா தனியார் யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்,
இத்தனை காலமாக திமுகவை பாஜக எதிர்க்கவில்லை. காரணம் பாஜகவிலேயே பெரிய அளவில் பிரச்சனை இருந்தது. இப்போது தலைவர் மாற்றம் நடந்துவிட்டது. கூட்டணியை உறுதி செய்துவிட்டனர். அதிமுக உடன் கூட்டணி உறுதியாகிவிட்டது. அவர்களின் உட்கட்சி பிரச்சனை , சொந்த வீட்டு பிரச்சனைகள் சரியாகிவிட்டது. இனி திமுகவிற்கு செக் வைக்கிறேன் பாருங்கள் என்று பாஜக இறங்கிவிட்டது.
இதையடுத்தே அமலாக்கத்துறை சார்பாக டாஸ்மாக் ரெய்டு விடப்பட்டு உள்ளது. எடப்பாடியை உள்ளே சேர்த்துவிட்டனர். அவரை கட்டாயப்படுத்தி பாஜக கூட்டணிக்கு கொண்டு வந்துவிட்டனர். அமித்ஷா இரண்டு நாட்கள் இங்கே தங்கி எடப்பாடியை கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட்டனர். மோடியின் நிழல் போன்றவர் அமித்ஷா. அவர் இரண்டு நாட்கள் இங்கே இருக்க காரணம் இதுதான். இந்த வேலையை முடித்தால்தான் திமுகவை குறி வைக்க முடியும் என்று அமித்ஷா நினைத்தார்.
அதனால்தான் எடப்பாடியை உள்ளே சேர்த்துவிட்டனர். அவரை கட்டாயப்படுத்தி பாஜக கூட்டணிக்கு கொண்டு வந்துவிட்டனர். ஜூன், ஜூலை மாதத்தில் இருந்து அடுத்தடுத்து திமுக அமைச்சர்கள் கைது செய்யப்படுவார்கள். அடுத்தடுத்து முக்கியமான தலைகள் கைதாக போகிறார்கள். டாஸ்மாக் ஊழலை பொறுத்தவரை ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்கிறார்கள்.
ஆனால் அவர்கள் கண்டுபிடித்து இருப்பது 50 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல். அதனால் இதை பெரிதாக்க பார்க்கிறார்கள். அமலாக்கத்துறை இப்போது குறைத்து சொன்னாலும் வழக்கில் போக போக விசாரணையை தீவிரமாக்குவார்கள். பல விஷயங்களை ஆலோசனை செய்கிறார்கள். டாஸ்மாக் முறைகேடு பற்றி தொழில்நுட்ப ரீதியாக விசாரணை செய்கிறார்கள். எத்தனை ஹாலோகிராம் அடிக்கிறார்கள் என்பது பற்றியும் கூட விசாரணைகளை செய்து வருகிறார்கள்.
இந்த லேபிள் 100 பாட்டிலுக்கு வாங்கி உள்ளனர் என்றால் 1500 பாட்டில் விற்றுள்ளனர். மீதம் உள்ள பாட்டில்கள் விற்றது எப்படி? எங்கே விற்கப்பட்டது? யாருக்கு அந்த பணம் போனது என்று விசாரணை செய்து வருகின்றனர். ஜெகத்ராட்சகன், டிஆர் பாலு நிறுவனங்களில் சோதனைகளை செய்ய இதுவே காரணம். இந்த பணம் எல்லாம் தனி நபரிடம் சென்றுள்ளது என்கிறார்கள்.
அதாவது முதலமைச்சரின் முதல் குடும்பத்திற்கு பணம் சென்றுள்ளது. முதல்வரின் மருமகன் சபரீசனுக்கு பணம் செல்ல இருக்கிறது. டாஸ்மாக் பணம் சபரீசனுக்கு சென்றுள்ளது. இதற்காக உதயநிதி ஸ்டாலினுக்கும், சபரீசனுக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்ப உள்ளது. டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளனர், என்று திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டியுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். இரண்டு நாட்களாக அங்கே ரெய்டு நடத்தப்பட்டு வந்தது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகிறது.