திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், போதை மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது.ஒருவர் தலைமறைவு .
திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், போதை மாத்திரைகள் விற்ற 4 பேர் கைது .
திருச்சி பாரதியார் சாலை பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அந்த கடையில் விற்பனைக்காக புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து கடையில் இருந்த சரவணக்குமார் (வயது 43) ராஜ்குமார் (வயது 36 )ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடமிருந்து 1,054 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து ள்ளனர்.
இதேபோன்று ஸ்ரீரங்கம் கீதாபுரம் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரமூர்த்தி
தலைமையில் ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர் அப்பொழுது அங்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்ய இருந்த ஸ்ரீரங்கம் கீதாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது 25 ) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொருவர் அபிஷேக் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.