திருச்சியில் காதல் தோல்வியால்
வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை .

மதுபோதையில் திடீர் முடிவு .
திருச்சி ஏர்போர்ட் பட்டத்தம்மாள் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மகன் குணால் (வயது 24) திருமணம் ஆகாதவர்.இந்நிலையில் நேற்று வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வேளாங்கண்ணிக்கு சென்று விட்டனர். இதையடுத்து குணால் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் தனியாக இருந்த குணால் காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்துள்ளார் இந்த நிலையில் திடீரென அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குணால் உடலை கைப்பற்றி பிரே பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போது குணால் காதல் தோல்வியால் மனம் உடைந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.இந்த சம்பவம் குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.