விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரியை ரூ. 150 கோடி வெள்ளையாகவும் பல நூறு கோடி கருப்பிலும் கொடுத்து வாங்கிய மணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் .
தேமுதிக நிறுவன தலைவரும் மறைந்த நடிகருமான கேப்டன் விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் வாங்கி உள்ளது .
எவ்வளவு தொகைக்கு இந்தக் கல்லூரி கைமாறியிருக்கிறது என பார்க்கலாம் …
.மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த 2001ஆம் ஆண்டு செங்கல்பட்டு அடுத்துள்ள மாமண்டூரில் அவருடைய தாய் மற்றும் தந்தையின் பெயரால் ‘ஸ்ரீ ஆண்டாள் அழகர்’ என்ற பொறியியல் கல்லூரியை தொடங்கி நடத்தி வந்தார். இந்தக் கல்லூரி சுமார் 75 ஏக்கர் பரப்பளவில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே மாமண்டூர் பகுதியில் அமைந்துள்ளது. AICTE-அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி (SAACE), இளங்கலை மற்றும் முதுகலை நிலைகளில் பல்வேறு பொறியியல் படிப்புகளை வழங்கி வருகிறது .
மின் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல், தகவல் தொழில்நுட்பம், மின் பொறியியல், விமானப் பொறியியல் மற்றும் பிற சிறப்புப் பிரிவுகளில் படிப்புகள் வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி தற்போது தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிர்வாகத்துக்கு கைமாறி இருக்கிறது. திருச்சியை தலைமையிடமாக கொண்டு தென்னிந்திய அளவில் பிரபலமான கல்வி நிறுவனமாக செயல்பட்டு வரும் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் குழுமம், ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி இனி தங்கள் குழுமத்தின் கீழ் புதுப்பொலிவுடன் இயங்க உள்ளதாக சில நாட்களுக்கு செய்தித்தாள்களில் பல லட்ச ரூபாய் செலவு செய்து விளம்பரமாக வெளியிட்டது.

இந்நிலையில், வெள்ளையாக சுமார் 150 கோடி ரூபாயும் கருத்தில் பலநூறு கோடி ரூபாயும் கை மாறி உள்ளதாக கூறப்படுகிறது .
ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை தனலட்சுமி ஸ்ரீனிவாசன் குழுமம் வாங்கியியிருப்பதாக சொல்லப்படுகிறது.தனலட்சுமி ஸ்ரீனிவாசன் குழுமமானது, கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவ கல்லூரிகள், பள்ளிகள் என பல்வேறு கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வருகிறது.
இது பெரம்பலூர், திருச்சி மற்றும் சென்னையில் கல்லூரி வளாகங்களைக் கொண்டுள்ளது. பெரம்பலூரில் உள்ள பிரதான கல்வி நிறுவன வளாகமானது 450 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது.
மதுரை ராஜா கல்லூரி.. திருச்சி ஜே.ஜே.கல்லூரி.. அண்மையில்இதே போல, மதுரையில் செயல்பட்டு வந்த ராஜா பொறியியல் கல்லூரி, சோலைமலை குழுமத்துக்கு கைமாறியது. திருச்சியைச் சேர்ந்த ஜே.ஜே கல்லூரியை செளடாம்பிகா கல்விக் குழுமம் கையகப்படுத்தியது. அண்மையில் கோவையைச் சேர்ந்த கல்விக் குழுமம் ஒன்று சேலத்தில் உள்ள முன்னணி கல்லூரி ஒன்றை கையகப்படுத்தியது. சிறிய அளவிலான கல்வி நிறுவனங்களை பெரிய கல்விக் குழுமங்கள் கையகப்படுத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜேப்பியார் குழுமம் மாமல்லன் மற்றும் எஸ்.ஆர்.ஆர் கல்வி நிறுவனங்களை கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.