Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நேருவை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக மாவட்ட துணை செயலாளர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

0

'- Advertisement -

சட்டமன்றத் தேர்தல் விதிமீறல் வழக்கு:

 

திருச்சியில் நேருவை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக மாவட்ட துணை செயலாளர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

 

வழக்கு ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதிக்கு ஒத்திவைப்பு.

 

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக துணை செயலாளராக இருப்பவர் பத்மநாதன்.

 

இவர் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பிரச்சாரத்தின் போது தேர்தல் விதிகளை மீறியதாக

21 -3 -2021 அன்று

எடமலைப்பட்டி புதூர் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர் .இந்த வழக்கு விசாரணை திருச்சி ஜே.எம் எஸ் – 2 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் ஜே.எம் .எண் – 2 நீதிமன்றத்தில் பத்மநாதன் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜரானார்.

அப்போது அதிமுக மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் முல்லை சுரேஷ் மற்றும் வழக்கறிஞர்கள் சுப்பிரமணியன், உறையூர் சந்திரமோகன், தனலட்சுமி ,சுபாஷினி, ரூகின் ஜோஸ் , தனலட்சுமி சுவாமிநாதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

 

இந்த வழக்கு மறு விசாரணை வருகிற ஆகஸ்ட் 5-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.