Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தென்னூர் உக்கிர மாகாளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம். நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

0

'- Advertisement -

திருச்சியில் புகழ் பெற்ற  தென்னூர் உக்கிர மாகாளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்

Ad banner

நாளை மறுநாள் நடக்கிறது

 

முற்கால கரிகால் சோழனின் குலதெய்வமாக பூஜிக்கப்பட்டு, வெற்றியின்

தெய்வமாக கொண்டாடப்படும்,

திருச்சி தென்னூர் அருள்மிகு உக்கிர

மாகாளியம்மன்

சித்திரை தேர் திருவிழா கடந்த 4-ம் தேதி மகா அபிஷேகம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

 

 

இதன் தொடர்ச்சியாக 5,6,7,8 ஆகிய தேதிகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மேலும் இரவு 7:00 மணிக்கு

கேடயம், அன்ன வாகனம், பூத வாகனம்,

ரிஷப வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நேற்று மகா அபிஷேகம் மற்றும் இரவில் யானை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது

இன்று(சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு திருத்தேருக்கு முகூர்த்த கால் நடும் விழா மற்றும் அபிஷேகம் நடந்தது.

நாளை( ஞாயிற்றுக்கிழமை )மகா அபிஷேகம் மற்றும் மாலையில் குதிரை வாகனத்தில் அம்மன் திரு வீதி உலா நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேர் திருவிழா

நாளை மறுநாள் ( திங்கட்கிழமை) கோலாகலமாக மிதுன லக்னத்தில் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள்.

முன்னதாக காலை 6 மணிக்கு அபிஷேகம் மற்றும் மூலஸ்தானத்திலிருந்து தாயார் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

 

வருகிற 13-ம் தேதி( செவ்வாய்க்கிழமை)

விடையாற்றி பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

இந்த சித்திரை தேர் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை தெய்வீக மகா சபை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.