வாடகை உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் தமிழகம் தழுவிய வேலை நிறுத்தம் .
எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாநிலத் தலைவர் மஞ்சுநாத், மாவட்ட செயலாளர் டோமினிக்ராஜ், மாவட்ட பொருளாளர் தர்மர் ஆகியோர் கூறுகையில்
எர்த் மூவர்ஸ் தொழிலை மீட்டு இத்தொழிலை நம்பி உள்ள லட்சக்கணக்கானவரின் வாழ்வாதாரத்தை காத்து வாடகை உயர்வு செய்திட மாநில அளவிலான எர்த் மூவர்ஸ் உரிமையாளர்களின் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் தழுவிய மாபெரும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக கூறினர் .
அவர்களின் கோரிக்கைகள்:-
1.புதிய வாகனங்களின் கடுமையான விலையேற்றம் உதிரி பாகங்கள் இன்சூரன்ஸ் மற்றும் வரி ஏற்றத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
2.திருச்சி மாவட்டத்தில் உள்ள EXCAVATOR நண்பர்களின் வாகனம் ஏற்றி செல்லும் போது டெலிவரி சலான் மற்றும் E-way பில் ஜிஎஸ்டி லோக்கல் உரிமையாளர்களுக்கு விலக்கு தேவை.
3.வெளி மாநில மாவட்ட வாகனங்கள் நமது சங்கத்தின் நிர்ணயித்த விலையை விட குறைவான கட்டணத்தில் இயக்குவதை அனுமதிக்கப்படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
4. அரசு வேலை, அரசு ஒப்பந்த வேலை மற்றும் காண்டிராக்ட் முறை எடுக்கும் நிறுவனங்கள் 80% சதவீதம் உள்ளூர் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
5. நமது சங்கத்தின் ஸ்டிக்கர் இல்லாமலும் சங்கம் நிர்ணயித்த விலையை விட குறைவாக வெளி மாவட்ட வண்டிகள் இயங்குவதை தடை விதிக்க வேண்டும்.
6.கட்டிடம் இடிக்கப்படுகின்ற குப்பைகளை ஏற்றி செல்லும் போது பில் இல்லை என்று வாகனத்தின் மீது அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும் என இந்த வேலை நிறுத்தத்தின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
7. நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்று வாங்கபட்ட வாகனத்தை ஒன்று அல்லது இரண்டு தவணை கட்ட தவறினால் வாகன உரிமையாளருக்கு முன்னறிவிப்பு கொடுக்காமல் அடியாட்களை வைத்து வழிப்பறி என்ற பெயரில் நிதி நிறுவனம் வாகன பறிமுதல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.
8. எனவே 10.04.2025 முதல் 14.04.2025 வரை திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட உரிமையாளர்கள் இணைந்து வாடகை உயர்வுக்காக வேலை நிறுத்தம் செய்து வாடகையை உயர்த்த முடிவு செய்துள்ளோம்.
ஆகவே அனைத்து கட்டுமான நிறுவனங்களும் கட்டுமான பொறியாளர்களும் அனைத்து சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவும் வாடகை உயர்வுக்கு ஒத்துழைப்பும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.
இந்த பேட்டியின் போது மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர் .