பட்ஜெட் விவாத கூட்டமா? அராஜக கூட்டமா ? மைக்கை பிடுங்கி எறியுங்கள் என ரவுடியை போன்று சவுண்ட் விட்ட திமுக கவுன்சிலர் காஜாமலை விஜி. அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி வெளிநடப்பு .
திருச்சி மாநகராட்சி பட்ஜெட் விவாத கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு
பட்டியலிட்ட மேயரிடம் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி வாக்குவாதம்.
திருச்சி மாநகராட்சியின் 2025 -2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று திருச்சி மாநகராட்சி காமராஜ் மன்றம் ஏ. எஸ் .ஜி. லூர்துசாமி கூட்டம் மண்டபத்தில் பட்ஜெட் விவாத கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மேபர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆணையர் சரவணன் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற
கூட்டத்தில் நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மதிவாணன் , துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், மற்றும் நகர் நல அலுவலர் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி உதவி ஆணையர், செயற்பொறியாளர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசிய போது கூறியதாவது :-
பட்ஜெட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு மாநகராட்சி அனைத்து நிதிகளையும் ஒதுக்கி உள்ளதாக
அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி தவறான கருத்துகளை கூறி பேட்டி அளித்துள்ளார். எனவே அது குறித்து பொதுமக்களுக்குசரியான தகவலை கூற வேண்டியது என்னுடைய கடமை ஆகும்.
ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு ரூபாய் 492.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதில் 140 கோடி மானியம் 231.26 கடன் பொது நிதி 121.29. கோடி.
இதேபோன்று குடிநீர் விநியோகம் பணிக்கு 2.03 மதிப்பீடு தொகை அதில் ஒரு கோடி மானியம் 1.03 பொது நிதி,ஆமினி பேருந்து நிலையம் கட்ட 17.60 கோடி மதிப்பீடு.இதில் ரூ.8.80 கோடி மானியம், ரூ.80 80 கோடி பொது நிதி,ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்ட ரூ.14.69 கோடி மதிப்பீடு.இதில் ரூ.8.51 கோடி மானியம், ரு.6.18 கோடி பொது நிதி ,புறவழி சாலை ரூ.68 கோடி மதிப்பீடு இதில் ரூ.53 கோடி கடன் ரூ.15 கோடி பொது நிதி,கனரா சரக்கு வாகன முனையம் கட்ட ரூ.11.14 கோடி மதிப்பீடு ரூ.8.52 கோடி மானியம் ரூ.2.62 கோடி பொது நிதி,
ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி கட்ட ரூ.236 கோடி மதிப்பீடு இதில் 128 கோடி மானியம், 100 கோடி கடன், 8 கோடி பொது நிதி,ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் சிறு பாலம் ரூ.2.30 கோடி மானியம் ரூ.046 பொது நிதி ரூ.1.84 கோடி ஆகும்.
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கவுன்சிலர்களுக்கு போதிய நிதியை வழங்கிடுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி மாநகராட்சியில் அனைத்து கவுன்சிலருக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக அதிமுக கவுன்சிலர்கள் உள்ள 14-வது வார்டில் இந்த ஆண்டு ரூ.565.31 லட்சத்திற்கு பணிகள் நடந்து வருகிறது இதே போன்று 37 வது வார்டில் ரூ.1040.19 லட்சம்,65 வது வார்டில் ரூ.3105.42 லட்சத்திற்கு பணிகள் நடைபெற உள்ளது என்று மேயர் அன்பழகன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று அதிமுக மாமன்ற குழு எதிர்க்கட்சி தலைவர் அம்பிகாபதி எழுந்து நின்று
குறுக்கிட்டு

பேசினார்
எங்கள் வார்டு
பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளதாக கூறியுள்ளீர்களே. இதில் மத்திய அரசின் நிதியும் தானே இருக்கிறது.நீங்கள் செய்தது போல் ஏன் கூறுகிறீர்கள் என்று கேட்டார். மேலும்
திருச்சி மாநகராட்சி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களால் கலைஞரின் திருவுருவச் சிலை நிறுவப்பட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலை அமைந்துள்ள பகுதி டிவிஎஸ் டோல்கேட் என அழைக்கப்படுவதை மாற்றி கலைஞர் டோல்கேட் என பெயர் மாற்றம் செய்திட மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட ம மண்டல குழு தலைவர் மதிவாணன் மூலமாக கடந்த 2024 பிப்ரவரி 21ஆம் தேதி கேட்டுக்கொள்ளப்பட்டது. பின்னர் மனுதாரரின் விண்ணப்ப நகலுடன் கடந்த 2024 ஜூலை 9ஆம் தேதி நகராட்சி நிர்வாக நிர்வாக இயக்குனர் மூலமாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து அரசு முதன்மைச் செயலாளர் 2025 மார்ச் 4 தேதி கடிதத்தில் டிவிஎஸ் டோல்கேட் பெயர் மாற்றம் தொடர்பான தீர்மானத்தை மாநகராட்சி மன்றத்தில் வைக்க அனுமதி வழங்கினார் எனவே டிவிஎஸ் டோல்கேட் என அழைக்கப்படுவதை மாற்றி கலைஞர் டோல்கேட் என பெயரிட ஏதுவாக மாவட்டத்தின் அனுமதி பெற்று அதன் அடிப்படையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தையும் எதிர்த்து கவுன்சிலர் அம்பிகாபதி டிவிஎஸ் டோல்கேட் என மக்களின் மனதில் பதிந்த பெயரை கலைஞர் டோல்கேட் என மாற்றுவது சரியல்ல கூறினார்
அதற்கு திமுக கவுன்சிலர்கள் சிலர் எழுந்து நின்று அம்பிகாபதியை பேசவிடாமல் கூச்சலிட்டனர் .
அப்பொழுது திமுக கவுன்சிலர் காஜாமலை விஜய் எழுந்து நின்று அதிமுக கவுன்சிலர் மைக்கை பிடுங்குங்கள் என ஒரு ரவுடியை போன்று ஆவேசமாக சத்தம் போட்டார்.
இதனைக் கேட்ட அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி நான் சொல்ல வேண்டிய கருத்தை கேட்காமல் மைக்கை பிடுங்குங்கள் என்று சொல்வது சரியா என்று ஆவேசமாக பேசிக்கொண்டு
மேயர் அருகில் சென்று அம்பிகாவதி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.பிறகு அவர் மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.அவருடன் மற்றொரு அதிமுக கவுன்சிலர் அனுசுயா ரவிசங்கரும் வெளியேறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அம்பிகாபதி கூறும் போது :-
இன்று பட்ஜெட் விவாத கூட்டம் தொடங்கியவுடன் மேயர் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் குறித்து விவரங்கள் தெரிவித்தார் மேலும் திருச்சியில் ஆண்டாண்டு காலமாக உள்ள மக்களின் மனதில் பதிந்த டிவிஎஸ் டோல்கேட் என்ற பெயரை கலைஞர் டோல்கேட் என மாற்றக்கூடாது என கூறினேன் ஆனால் திமுக கவுன்சிலர் அனைவரும் பேசவிடாமல் கூச்சலிட்டனர் . அதிலும் கவுன்சிலர் காஜாமலை விஜி எனது மைக்கை ஆப் செய்யுங்கள் அல்லது மைக்கை பிடிங்கி எறியுங்கள் என ஆவேசமாக கத்தினார், சுதந்திரமாக மாமன்ற கூட்டத்தில் பேச முடியாது என வெளிநடப்பு செய்கிறோம் என கூறினார் .
இதனால் சிறிது நேரம் பட்ஜெட் விவாத கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.