குளித்தலையில் அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் நகைகளை திருடிய பெண்ணை போலீஸாா் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை அண்ணாநகரைச் சோ்ந்தவா் ரமேஷ்பாபு. இவரது மனைவி அன்பழகி(வயது 51). அரசுப் பள்ளி ஆசிரியை.

இவா்களது வீட்டில் மாா்ச் 5-ஆம்தேதி வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டு திரும்பிய போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 37 பவுன் தங்க நகைகள் காணாமல் அதிர்ச்சி அடைந்தால் இது குறித்து நகை திருட்டு போனதாக குளித்தலை காவல் நிலைய போலீசாரிடம் ரமேஷ்பாபு புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
அப்போது வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் ரமேஷ்பாபு வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருக்கும் ரத்தினம் மனைவி சுகந்தி(வயது 39) என்பவா் நகைகளை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா் சுகந்தியிடம் விசாரித்தபோது, நகைகளை தான் திருடியதை ஒப்புக்கொண்டாா்.
இதையடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை சுகந்தியை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து நகையை மீட்டு, பின்னா் குளித்தலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். பின்னா் திருச்சி பெண்கள் சிறையில் சுகந்தியை அடைத்தனா்.