Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

குரங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட இருவர் கைது. நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோல்கள் பறிமுதல்.

0

'- Advertisement -

உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் ராமபிரானின்  பிரதான சீடரான ஆஞ்சநேயரை  வணங்கி வருகின்றனர் . குரங்குகளை இந்துக்கள் அனைவரும்  அனுமனாக பாவித்து வணங்கி வருகின்றனர். அப்படிப்பட்ட குரங்குகளை வேட்டையாடி  சமைத்து சாப்பிட்ட சம்பவம் திண்டுக்கல் பகுதியில் ஏற்படுத்தி உள்ளது .

திண்டுக்கல் வனப்பகுதியில் குரங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

 

அவர்கள் வேட்டையாட பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி மற்றும் குரங்கு தோல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

Suresh

காடுகளில் உள்ள வன விலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டியது. இருந்த போதும் ஒரு சிலர் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து விலங்குகளை வேட்டையாடி வருகின்றனர், அதிலும் கறிக்காக மான், தந்தத்திற்காக யானை, தோலுக்காக புலி போன்ற விலங்கள் வேட்டையாடப்படுகிறது, இதனை கட்டுப்படுத்த வனத்துறை தீவிர சோதனையிலும் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது கறிக்காக குரங்கை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திண்டுக்கல் வனப்பகுதியில் ஏராளமான குரங்கள் உள்ளது. அந்த வகையில், சாணார்பட்டி தவசிமடை வீரசின்னம்பட்டியை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 33). இவரது தோட்டத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்தது. இதனால் தோட்டத்தில் இருந்த பழங்கள், தானியங்கள் குரங்குகளால் சீரழிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குரங்குகளை கட்டுப்படுத்த ராஜராம், வடுகபட்டியை சேர்ந்த ஜெயமணி (வயது 31) என்பவரிடம் உதவி கேட்டார்.

 

இதனையடுத்து ராஜாராம் மற்றும் ஜெயமணி ஆகிய 2 பேரும் சேர்ந்து நாட்டுத்துப்பாக்கியை வைத்து குரங்குகளை வேட்டையாடியுள்ளனர். இதில் இறந்த 2 குரங்குகளை சமைத்து சாப்பிட்டுள்ளனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்த தகவலின் அடிப்படையில், மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில் வனச்சரகர் மதிவாணன் தலைமையில் வனத்துறை குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

 

அப்போது அங்கு 2 குரங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட ஜெயமணி, ராஜாராம் ஆகியோர் அதன் தோல்களை தோட்டத்திலேயே புதைத்து வைத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து வனத்துறையினர் வேட்டையாட பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் குரங்கு தோல்கள் பறிமுதல் செய்தனர்.

 

குரங்குகள் தொல்லை இருந்தால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் தாங்களாகவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட க்கூடாது. விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.