2021 சட்டமன்ற தேர்தல் வழக்கு:
திருச்சி நீதிமன்றத்தில் அதிமுக பிரமுகர் ஆஜர்.
ஏப்ரல் 1-ந் தேதிக்கு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் வி.பத்மநாதன் ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேருவை எதிர்த்து போட்டியிட்டார்.
அப்போது இவர் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில்
ஈடுபட்ட போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பத்மநாதன் மீது எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
இந்த வழக்கு திருச்சி ஜே.எம்.எண். 2ம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் திருச்சி அதிமுக மாவட்ட துணை செயலாளர் பத்மநாதன் இன்று நேரில் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பால்ராஜ் வழக்கை ஏப்ரல் 1-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்த வழக்கில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் முல்லை சுரேஷ், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், சாகர், திருவரங்கம் செல்லப்பாண்டி ஆகியோர் ஆஜராகினர்.