திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் .
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் நடைபெற்றது .
அவைத் தலைவர் அருணகிரி, மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா தேவி சுப்பிரமணி, பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் முகமது இஸ்மாயில் , ஒன்றிய செயலாளர்கள் எஸ் கே டி கார்த்திக், ராவணன், டிஎன் சிவகுமார், சூப்பர் டி என் டி நடேசன், மகளிர் அணி செல்வ மேரி, ஜார்ஜ் பாசறை அருண் நேரு, பேரவை சூரியயூர்ராஜா, நகரச் செயலாளர் எஸ் .பி பாண்டியன், பகுதி செயலாளர்கள் தண்டபாணி பாலசுப்ரமணியன் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் வருகிற 24-ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை தெற்கு மாவட்டம் முழுவதும் ஒன்றியம் நகரம் பகுதி பேரூர் கிளை வட்டக் கழகங்கள் மூலம் அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது,
மீண்டும் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியை மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர வைக்க அயராமல் பாடுபடுவது,
கள்ளச்சாராயம் கஞ்சா போதை ஊசிகள் போன்றவற்றை தடுக்க தவறிய திமுக அரசை வன்மையாக கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.