திருச்சி:ரூ.18.63 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பறவைகள் பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .

திருச்சி அய்யாளம்மன் படித்துறை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ்; ரூ.18.63 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பறவைகள் பூங்காவை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொது மக்களின் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன்,மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகர ஆணையர் சரவணன், மாநகர மேயர் அன்பழகன் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கங்காதரணி, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கட்சி நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.