திருச்சி கருமண்டபம் ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது .

இந்த மகா கும்பாபிஷேக விழாவையொட்டி இன்று காலை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்த்து சாந்தி ஆகிய பூஜைகள் நடைபெற்றன.
இதில் ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சி. ஜெயபால், தலைவர் ஆர். ஞானசேகர், செயலாளர் எம். பரமசிவம், கௌரவத் தலைவர் வி.பத்மநாதன், பொருளாளர் எம்.கண்ணதாசன், துணை தலைவர்கள் எம். அழகிரி , பி.ஆர்.பி. பாலசுப்பிரமணியன், துணைச் செயலாளர்கள் எம்.பி.பாலு, எஸ். சசிகுமார், பி. ராஜேந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாளை காலை கோயில் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி வேதங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது .