பேரனுக்கு பேனர் வைக்கவும், போஸ்டர் ஒட்டவும் தயாராக இல்லை. கட்சியிலிருந்து விலகுகிறேன் திமுக பிரமுகரின் பரபரப்பு ட்விட்டர் பதிவு .
தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக, கட்சியை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் கட்சியில் தீவிரமாக செயல்படுபவர்களுக்கு கட்சி பொறுப்புகள் வழங்கப்ட்டு வருகிறது. மேலும் செயல்படாத நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணியில் முன்னாள் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய ஒன்றிய பிரதிநிதியாக செயல் பட்டு வந்த எழில்அரசன் என்பவர் திமுகவில் இருந்து விலகுவதாக கூறி சமூகவலை தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,திராவிட முன்னேற்றக் கழகத்தின் சேலம் மத்திய மாவட்டக் கழகத்தில் தகவல் தொழில்நுட்ப அணியில் முன்னாள் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய ஒன்றிய பிரதிநிதியாக செயல் பட்டு வந்த சேலம் MP.எழில்அரசன் ஆகிய நான் கடந்த ஆண்டே கட்சியில் இருந்து நீக்குங்கள் என விருப்பம் தெரிவித்து அமைச்சர் பனமரத்துபட்டி ராஜேந்திரனிடம் விருப்பம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் இன்று 04.02.2025 முதல் கட்சியில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் எதற்காக கட்சியில் இருந்து விலகுகிறேன் என்ற காரணத்தையும் பட்டியலிட்டுள்ளார். அதில்,
* திமுக ஆட்சிகளில் தலித்களுக்கு பாதுகாப்பு இல்லை, கட்சியில் எந்த முக்கியத்துவமும் அளிப்பதில்லை.
* பேரனுக்கு பேனர் வைக்கவும், போஸ்டர் ஒட்டும் நிலை வெகு தொலைவில் இல்லை, இதற்கு நாங்கள் தயாராக இல்லை.
எனவே இனியும் என்னால் இந்த கட்சியில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது நாள்வரை ஒத்துழைப்பு நல்கிய கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் திமுக கட்சி நிர்வாகியின் இந்த ட்விட்டர் பதிவு தற்போது பரபரப்பாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது .