Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாஜக புதிய திருச்சி மாவட்ட தலைவராக ஒன்டிமுத்து அறிவிப்பு . புறநகர் அஞ்சா நெஞ்சன் .

0

'- Advertisement -

திருச்சி மாவட்ட பாஜக தலைவராக கே. ஒண்டிமுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

பாஜக மாவட்டத் தலைவா் பதவிகளுக்கான 2-ஆவது முறை கருத்துகேட்புக் கூட்டம் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்றது.

இதில் திருச்சி மாவட்டத் தலைவா் பதவிக்கு கே. ஒண்டிமுத்து, காளீஸ்வரன், கெளதம், கே. அஞ்சா நெஞ்சன் உள்ளிட்டோா், பாஜக முன்னாள் தேசிய செயலாளா் ஹெச்.ராஜாவிடம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்நிலையில் தோ்வு செய்யப்பட்ட மாவட்டத் தலைவா்கள் குறித்த அறிவிப்பு நிகழ்ச்சி, சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது. காணொலிக் காட்சி மூலம் நடந்த இந்நிகழ்வில், திருச்சி மாநகா் மாவட்ட தலைவராக கே. ஒண்டிமுத்து, புறநகர் மாவட்ட தலைவராக கே. அஞ்சா நெஞ்சன் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடா்ந்து திருச்சி பாஜக அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் கே. ஒண்டிமுத்துக்கு, முன்னாள் தேசியச் செயலாளா் ஹெச்.ராஜா உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மாலை, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டத் தலைவா் ராஜசேகரன், பெரம்பலூா் மாவட்ட பொறுப்பாளா் இல. கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து மாவட்ட தலைவா் ஒண்டிமுத்து, திருச்சியில் உள்ள முக்கிய அரசியல் தலைவா்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.