திருச்சி: லால்குடியில் குடிபோதையில் மதுவில் விஷம் கலந்து குடித்த தொழிலாளி பரிதாப சாவு
வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய 2 மாதத்தில் சோகம் .
திருச்சி மாவட்டம் லால்குடி பெருவளநல்லூர்
கவுண்டர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைமணி (வயது 30). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.
பின்னர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பினார்.
பிச்சைமணிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது இந்த நிலையில் மது போதையில் வீடு திரும்பிய அவர் மீண்டும் மது அருந்தினார். அப்போது போதையில் மதுவுடன் பூச்சிக்கொல்லி மருந்தை தவறுதலாக கலந்து முடித்து விட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் மேல் சிகிச்சைக்காக திருச்ச திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அதன் பின்னர் மீண்டும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கே டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் பிச்சைமணி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது தந்தையின் இரண்டாவது மனைவி செல்வராணி கொடுத்த புகாரியின் அடிப்படையில் லால்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிபோதையில் மதுவுடன் தவறுதலாக பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடி குடித்து தொழிலாளி இழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.