தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமையை தடுக்க வேண்டி திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் பாரதிதாசன் தலைமையில் மனு .
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் :
அதிக அளவில் உள்ள போதை, கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்
திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிகவினர் மாவட்டச் செயலாளர் பாரதிதாசன் தலைமையில் கலெக்டரிடம் மனு.
திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளரும்,மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவருமான சன்னாசிப்பட்டி ஆர்.பாரதிதாசன் தலைமையில் நிர்வாகிகள் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர் .அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு பொங்கல் தொகுப்புடன் ரூபாய்1000/- வழங்கிட வேண்டியும்,
பெண்களுக்கும், மாணவிகளுக்கும் தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமை தடுக்க வேண்டியும்,
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டியும்,
போதை மற்றும் கஞ்சா புழக்கம் அதிக அளவில் உள்ளதை தடுக்க வேண்டியும் திருச்சி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கோரிக்கை வைக்கிறோம். மேற்கண்ட கோரிக்கைகளை நடைமுறைபடுத்த ஆவணம் செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் அர்ஜுனன்,தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் முல்லை சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.