திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்பு .
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில்
தமிழகத்திலே முதல்முறையாக
துளசி பார்மசி உடன் இணைந்து அனைத்து மாதங்களிலும் முதல் வாரத்தில்
கட்டாயமாக இலவசமாக BP மற்றும் SUGAR பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம் சென்ற வருடம் 2024 நவம்பர் மாதம் மாண்புமிகு நீதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட்டன அதன் தொடர்ச்சியாக
இரண்டாம் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு)பரிசோதனை முகாம்
நேற்று 6/1/2025 திங்கள்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்றது
முகாமில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்துக்கு வந்த காவலர்கள் என 300-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி.வி.வெங்கட் செய்திருந்தார்.