Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வாங்கிய ரூ.50 லட்சதை தராமல் கொலை மிரட்டல் விடுத்த தாய்,மகள். திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் விதவை பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

0

திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் வள்ளி (வயது 58 ) கணவர் பெயர் விஜயகுமார்

இவர் இன்று மதியம் திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ரூ.50 லட்சத்தை ஏமாற்றி வாங்கியவர்களிடம் பணத்தை திரும்ப பெற்று தரக் கூறி தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை தடுத்து தலையில் தண்ணீர் ஊற்றி போலீசார் காப்பாற்றினர் . மேலும் போலீசார் என்ன என்று விசாரித்த போது அவர் திருச்சி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் இடம் அளித்த மனுவை காண்பித்தார் அதில் :-

எனது கணவர் அரசு ஊழியராக பணியாற்றி வந்து கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். எனது மகன் இன்ஜினியரிங் படித்து விட்டு வெளிநாட்டில் வேலை செய்து வருகிறான்.

எனக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இலால்குடி அகிலாண்டேஸ்வரி அபிஷேகபுரத்தை சேர்ந்த செல்லதுரை மனைவி சந்திரா என்பவர் எனக்கு அறிமுகமானார். பின்பு நட்பாக பழகி வந்தோம். இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் சந்திராவும், அவரது கணவர் செல்லதுரையும் எங்கள் வீட்டிற்கு வந்து என்னிடம் எனது மகளை டாக்டருக்கு படிக்க வைக்க போகிறோம் என்றும், எனது மகளின் படிப்படிற்கு ரூ.50,00,000/- (ரூபாய் ஐம்பது இலட்சம் மட்டும்)
வரை செலவாகும் என்றும் அதற்கு நீங்கள் எங்கள் வீட்டின் அசல்
பத்திரத்தை வைத்துக்கொண்டு ரூ.50,00,000/- (ரூபாய் ஐம்பது இலட்சம்) கடனாக கொடுத்தால் அதனை நான் வெளிநாட்டிற்கு
வேலைக்கு சென்று கொஞ்சம், கொஞ்சமாக கொடுத்து விடுகிறேன்
எனறு கூறினார்கள். அப்போது நானும் இவ்வளவு பணம் என்னிடம்
கிடையாது என்று கூறினேன். நீங்கள் பணம் கொடுத்து உதவி
செய்யவில்லையென்றால்
எங்கள மகளின்
வாழ்க்கை கேள்வி குறியாகிவிடும் என்று அழுது கெஞ்சி கதறினார்கள். பின்பு மேற்படி
சந்திரா, செல்லதுரையிடம் வெளிநாட்டில் இருக்கும் எனது மகனிடம்
கேட்டு சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டேன். பின்பு மறுபடியும்
இரண்டு நாள் கழித்து மேற்படி செல்லதுரையும், சந்திராவும் தனது
மகளை அழைத்து வந்து, மகளை
எங்களிடம் பணம்
கேட்க சொன்னார்கள். பின்பு நானும் மனிதாபிமான அடிப்படையில் வீட்டின்
பத்திரத்தை வைத்துக் கொண்டு பணம் கொடுக்க சம்மதித்தேன். அதன் அடிப்படையில் எனது கணவரின் இறப்பு பணம் மற்றும் எனது மகன் வெளிநாட்டிலிருந்து அனுப்பிய பணம் என்று
பல தவணையாக
ரூ.33,25,000/- (ரூபாய் முப்பத்து மூன்று இலட்சத்து இருபத்து ஐந்தாயிரம்
மட்டும்)-ஐ கடனாக கொடுத்தேன்.மேற்படி பணத்தை பெற்றுக் கொண்ட
மேற்படி நபர்கள் மேற்படி பணத்தை இன்னும் இரண்டு வருடத்தில் கொடுத்து விடுவதாக நம்பும் படி உறுதியளித்தனர். நானும் அவர்களது
பேச்சை நம்பி இருந்து வந்த நிலையில் கடந்த 20.05.2019-ம் தேதியன்று
சந்திராவும், அவரது மகள் ஜனனி அபர்னாவும் எனது வீட்டிற்கு வந்தனர்,

அப்போது நான் செல்லதுரை எங்கே என்று கேட்டதற்கு, அப்போது அப்பா
வெளிநாட்டில் உள்ளார் என்று கூறினார். மேலும் சந்திராவும், அவரது
மகள் ஜனனி அபர்னாவும் எங்களுக்கு சொந்தமான வீட்டின் பத்திரத்தை கொடுத்தால், இன்னும் ஒரு வாரத்தில் உங்கள் கடன் தொகை முழுவதையும் கொடுத்து விடுவதாக உறுதியளித்தார். அப்போது நான் பணத்தை கொடுத்துவிட்டு பத்திரத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியதற்கு அப்போது சந்திராவின் மகள் என்னை நம்பி கொடுங்கள் நான் உங்கள் பணத்திற்கு பொறுப்பு என்று நம்பும்படி உறுதியளித்தார். நானும், அவர்களின் பேச்சை நம்பினேன். பின்பு சந்திராவும், அவரது மகளும் ஒரு இருபது ரூபாய் பத்திரத்தில் தன் கைப்பட எழுதி கொடுத்துவிட்டு பத்திரத்தை கடந்த 20.05.2019-ம் தேதியன்று வாங்கி சென்றார்கள். பின்பு நான் ஒரு வாரம் கழித்து எனது பணம் சம்மந்தமாக மேற்படி நபர்களிடம் கேட்டபோது வங்கியில் லோன் போட்டுள்ளதாகவும் இன்றும் ஒரு வாரத்தில் பணம் கிடைத்து விடும் என்று கூறினார்கள். நானும் அவர்களுடைய பேச்சை நம்பி இருந்து வந்தேன். பின்பு நேரிலும் போனிலும் தொடர்பு கொண்டு கேட்டபோது இன்று, நாளை என்று சாக்கு, போக்கு கூறினார்கள். பின்பு கொரோனா பெருந்தொற்று நோய் என்று கூறினார்கள். இந்நிலையில் மேற்படி பணம் சம்மந்தமாக கடந்த 24.02.2022-ம் தேதி சந்திராவிடம் கேட்டுபோது, தேவுடியா நீ என்ன பெரிய ஆளு உன் பணத்தை கொடுக்க முடியாது என்றும், உன்னால் முடிந்தததை பார்த்துக் கொள் என்றும் மீண்டும் பணம் கேட்டு வதந்தால், என் மகளும், நானும் சேர்ந்து எனது ஆட்களை வைத்து உன்னையும், உனது குடும்பத்தையும் காலி செய்து விடுவேன் என்று மிரட்டினார். மேற்படி நபர்களின் செய்கையால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.

ஆகவே, அய்யா அவர்கள் இது சம்மந்தமாக விசாரணை செய்து மருத்துவ படிப்பு செலவுக்கு என்று அவர்களது வீட்டின் அசல் பத்திரத்தை வைத்து பணத்தை பெற்றுக் கொண்டு மேலும் என்னை நம்பும்படி உறுதியளித்து ஒரு பத்திரத்தில் பணத்தை கொடுத்து விடுவதாக கூறி உறுதி மொழி எழுதிக் கொடுத்து விட்டு அசல் ஆவணத்தை பெற்றுக் கொண்டு, தற்போது பணத்தை கொடுக்க மறுத்தும், பணத்தை திரும்ப கேட்டதற்கு என்னை தகாத வார்த்தையால் திட்டியும், என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கும் மேற்படி நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மேற்படி நபர்களிடமிருந்து பெற்றுத்தருமாறு பணிவடன் கேட்டுக் கொள்கிறேன் என அந்த மனுவில் கூறி இருந்தார்.

குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் நாளான இன்று திடீரென பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.