Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இரவு பணியில் இருந்த பெண் போலீஸிடம் போதையில் தவறாக நடக்க முயன்ற எஸ் எஸ் ஐ சஸ்பெண்ட்

0

'- Advertisement -

 

Ad banner

ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் இரவுப் பணியில் இருந்த பெண் காவலரிடம், மது போதையில் தவறாக நடக்க முயன்ற எஸ் எஸ் ஐ மோகன்ராஜை சஸ்பென்ட் செய்து எஸ்பி கண்ணன் உத்தரவிட்டார்.

TVK ad

ராஜபாளையம் அருகே தொம்பகுளத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 53) என்பவர் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
மலையடிபட்டியில் உள்ள காவலர் குடியிருப்பில் மோகன்ராஜ் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 23ம் தேதி இரவு பணியில் இருந்த மோகன்ராஜ் மதுபோதையில் காவல் நிலையத்தில் பாரா பணியில் இருந்த பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்று உள்ளார்.

இதுகுறித்து, பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் எஸ்எஸ்ஐ மோகன்ராஜ் உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்றது, பணியின் போது மது அருந்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக எஸ்எஸ்ஐ மோகன்ராஜை சஸ்பென்ட் செய்து எஸ்பி கண்ணன் உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் மோகன்ராஜ் மீது தொடர்ந்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.