ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பால பணிகளை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்ததன் எதிரொலி இன்று திருச்சி மேயர் ஆய்வு
திச்சியில் உள்ள மையப் பகுதிகளான மாரிஸ் தியேட்டர் மேம்பாலம் , திருச்சி ரயில்வே ஜங்ஷன் மேம்பாலம் ஆகியவற்றை அகற்றப்பட்டு அப்பகுதிகளில் போக்குவரத்து சுத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது . இதனால் திருச்சி மாநகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . இதனை கண்டித்தும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் வரும் 31-ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து திருச்சி மாநகர மேயர் அன்பழகன் கடந்த மார்ச் மாதம் பூமி பூஜை போட்ட பின்பு 8 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் முறையாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ரூ 34.10 கோடியில் கட்டப்பட்டு வரும்
மாரிஸ் மேம்பாலப்பணிகள் 60 சதவீதம் முடிந்துவிட்டது – விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என
பணிகளை ஆய்வு செய்தபின் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கூறியுள்ளார்.

திருச்சி மாநகராட்சி சாலை ரோடு மற்றும் கோட்டை ஸ்டேஷன் சாலை இணைக்கும் ரயில்வே மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை மேயர் மு. அன்பழகன் மாநகராட்சி பொறியாளர்களுடன் இன்று ஆய்வு
செய்தார்.
திருச்சி மாநகராட்சி சாலை ரோடு மற்றும் கோட்டை ஸ்டேஷன் சாலையினை இணைக்கும் வகையிலும்,எதிர்கால போக்குவரத்தினை கருத்தில் கொண்டு பொதுமக்களின் நலன் கருதி இருவழி பாதையாக பாலத்தினை புதிதாக கட்டுவதற்கு மதிப்பீடு தொகை ரூபாய் 34.10 கோடி மதிப்பீட்டில் நகர் ஒரு அமைப்பு துறை நிதியின் கீழ் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மேயர் அன்பழகன் , நகரப் பொறியாளர் பி. சிவபாதம், மண்டலத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாமன்ற மாமன்ற உறுப்பினருடன் கட்டுமானப் பணிகளின் வரைபடத்தைப் பார்வையிட்டு அதன் விவரங்களைப் பொறியாளர்களிடம் கேட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டன.
மேயர் அன்பழகன் தெரிவித்ததாவது,
மாரிஸ் பாலம் மாநகராட்சி மூலம் இருபுறமும் பணிகள் நடைபெற்று வருகிறது 60 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் பணிகள் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணி தொடங்கி முடிவடைந்த மாநகராட்சிப் பணிகள் நடைபெற்று வரும் இருபுறமும் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
ரயில்வே துறையில் பாலம் கட்டப்பட்டு 157 வருடங்கள் ஆனதால் கனரக வாகனத்திற்கு ஏற்ற வகையில் இல்லாததாலும் இப்பாலும் பழுதடைந்துள்ள காரணத்தினால் ரயில்வே மேம்பாலத்தை உயரப்படுத்தி அகலப்படுத்தியும் கட்டப்பட்டு
புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலத்தின் நீளம் 31.39 மீட்டர் அகலம் 20.70 மீட்டர் ஆகும், ரயில்வே பாலத்தின் பகுதி கிழக்கு பகுதி 223.75 மீட்டர் நீளமும் 623.75 மீட்டர் நீளமும் உள்ளது. மீட்டர் நீளமும் ,15.61 மீட்டர் அகலம் உடையதாகும் சாலையினை தடுப்பு சுவர்களுடன் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
இப்ப பாலத்தினை இருவழி பாதையாக கட்டப்படுவதினால் மெயின் கார்ட் கேட் பகுதியில் இருந்து தில்லைநகர் தென்னூர் புத்தூர் மற்றும் உறையூர் பகுதிகளுக்கு போக்குவரத்து இடையூறு இன்றி சுலபமாக செல்ல இயலும் என மேயர்அன்பழகன் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக்குப் பின் பொதுமக்கள் கூறும்போது போக்குவரத்து பிரச்சனை ,பாலப் பிரச்சனை, சாலை பிரச்சனை போன்ற சிறு சிறு பிரச்சனைகளுக்கும் ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் அறிக்கை விட வேண்டுமா என கேள்வி எழுப்புகின்றனர் .