புதை வடிகால் திட்டப் பணிகள் காரணமாக தில்லைநகரில் நாளை வியாழக்கிழமை மின்தட செய்யப்படுகிறது.
இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
திருச்சி தில்லை நகா் பகுதியில் புதை வடிகால் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்,
தில்லை நகா் முதல் குறுக்குத் தெரு, மேற்கு, இரண்டாவது குறுக்குத் தெரு, மூன்றாவது குறுக்குத் தெரு, சாஸ்திரி சாலை, வடகிழக்கு விஸ்தரிப்பு, 1 முதல் 5 குறுக்குத் தெரு வரை, தேவா் காலனி, சாலை ரோடு கிழக்கு (தில்லை நகா் முதல் மாரீஸ் மேம்பாலம் வரை), மலைக்கோட்டை காலனி, கரூா் புறவழிச்சாலை, அண்ணாமலை நகா் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில்
நாளை வியாழக்கிழமை (டிச.12) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.