திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகே நடைபெற உள்ள ஜெயலலிதாவின் 8.ம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் அனைவரும் திரளாக பங்கேற்க மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் அழைப்பு .
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க
அமைப்பு செயலாளர்,
நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சரரும் சட்டமன்ற உறுப்பினருமான P. தங்கமணியின் அறிவுறுத்தலின்படி
கழகத்திற்காகவும், தமிழக மக்களுக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8- ம்ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு..
திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில்…
நாளை 5.12.2024, வியாழக்கிழமை காலை 10.00 மணி அளவில்..
திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே அமைந்துள்ள எம்.ஜி.ஆர் திருவுருவ சிலை அருகில்.
ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட உள்ளது..
அதுசமயம் அதிமுகவின்
மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தனது அறிக்கையில் கூறியுள்ளார் .