Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தில்லை நகர் மருத்துவமனை கழிவறைக்குள் பிணமான கார் டிரைவர் .

0

 

திருச்சி தில்லை நகர் மருத்துவமனை கழிவறைக்குள் பிணமாக கிடந்த கார் டிரைவர் .

திருச்சி தில்லை நகரில் மருத்துவமனை கழிவறைக்குள் பிணமாக கிடந்த கார் டிரைவர் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் குமாரமங்கலம் கிராமம் சக்தி நகரை சேர்ந்தவர் குமாரவேல் (வயது 55). கார் டிரைவர். இவர் திருச்சி தில்லைநகர் 11-வது கிராஸ் பகுதியில் உள்ள நரம்பியல் மையம் மருத்துவமனைக்கு நோயாளி ஒருவரை அழைத்து வந்தார். நோயாளி டாக்டரை பார்க்க மருத்துவமனைக்குள் சென்று விட்டார்.கார் டிரைவர் குமரவேல் தனது காரை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவிட்டு, கழிவறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் டிரைவர் குமாரவேல் வரவில்லை. நோயாளி டாக்டரை பார்த்து விட்டு,டிரைவரை தேடினார்.கார் மட்டும் மருத்துவமனை வளாகத்தில் நின்றது. ஆனால் டிரைவரை காணவில்லை.
உடனே மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தவர் டிரைவரின் செல்போனுக்கு போன் அடித்தார். டிரைவர் போனை எடுக்கவில்லை. அப்போது கழிவறைக்குள் இருந்து செல்போன் ஒலி ஒலித்தது. உடனே மருத்துவமனை ஊழியர்கள் கழிவறையின் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது கழிவறையில் இருந்தவாறு குமாரவேல் பிணமாக கிடந்தார்.

உடனே தில்லை நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தில்லைநகர் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து குமாரவேலின் மனைவி பரிமளா அளித்த புகாரின் அடிப்படையில் தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமாரவேலின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.