திருச்சியில்
பழைய இரும்பு கடையின் பூட்டை உடைத்து கொள்ளை ரூ.50 மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை.
திருச்சி முதலியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன் குமார். இவர்
திருச்சி மார்சிங் பேட்டை துர்க்கை அம்மன் கோவில்
அருகாமையில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார், பின்னர் இன்று வழக்கம்போல் காலை கடையை திறக்க வந்த போது கடையின் சட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது
80 கிலோ எடை கொண்ட காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதன் மதிப்பு ரூபாய் 50,000 ஆகும்.
இது குறித்து பொன் குமார் பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.