Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வெளிநாட்டில் சம்பாதித்து வீடு கட்டி புதுமனை புகு விழாவுக்கு திருச்சி வந்த நபர் காவேரி ஆற்றில் மூழ்கி மர்மமான முறையில் பலி . கொலையா என போலீசார் விசாரணை.

0

 

திருச்சி, தெற்கு காட்டூர், காவேரி நகரை சேர்ந்த திருச்சி மாவட்டம், பாப்பா குறிச்சி, தெற்கு காட்டூர், காவேரி நகரைச் சேர்ந்த சி.கனகராஜ் என்பவரின் மகன் க.ராஜராஜன் (வயது 32).

இவர் வெல்டிங் இன்ஸ்பெக்சன் துறையில் அபுதாபியில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 17ஆம் தேதி தான் கட்டிய புதிய வீட்டின் புதுமனை புகுவிழாவிற்காக அமுதாபியில் இருந்து தனது சொந்த ஊரான காட்டூருக்கு வந்துள்ளார்.

புதுமனை புகுவிழா முடிந்து வரும் டிசம்பர் 2ஆம் தேதி மீண்டும் அபுதாபிக்கு செல்வதற்காக விமான முன்பதிவும் செய்திருந்த நிலையில், கடந்த (நவம்பர் 24) மாலை அவரது நண்பர் அருள் என்பவரும் மற்ற இருவர்களும் சேர்ந்து வீட்டிலிருந்து அவரை வெளியே அழைத்துச் சென்று மது வாங்கி அருந்தியுள்ளனர்.

பின்னர் காவிரியில் குளிப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

திருவெறும்பூர் அடுத்துள்ள பூசத்துறை என்ற பகுதியில் காவிரி ஆற்றில் இறங்கி ராஜராஜன் குளித்துள்ளார். மது அருந்திவிட்டு அவர் நீரில் இறங்கி குளித்துவிட்டு கரை ஏறுவது போன்று வீடியோவையும் அவரது நண்பர்கள் தங்களது அலைபேசியில் காணொளியாக எடுத்துள்ளனர்.

அதே நேரம், ஆற்றில் இறங்கி கரைக்கு ஏறியவர் மீண்டும் தண்ணீரில் மூழ்கி விட்டதாக அவரது நண்பர்கள் அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளனர்.

இதன் அடிப்படையில், திருவெறும்பூர் பூசத்துறை பகுதி பொதுமக்களும் ராஜராஜனை ஆற்றில் இறங்கி தேடியுள்ளனர். அவர் கிடைக்காததால் கல்லணை காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அவரை தேடி உள்ளனர். 24- ஆம் தேதி இரவும், 25 ஆம் தேதி அதிகாலையும் என மீன்பிடி நண்பர்களும், அவரது நண்பர்களும் தீயணைப்புத் துறையினரும் ஆற்றில் இறங்கி தேடியும் ராஜராஜன் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நவம்பர் 26 நேற்று காலை சுமார் 6 மணி அளவில் தோகூர் அருகில் காவிரி ஆற்றில் ஆண் சடலம் ஒன்று நீரில் மிதப்பதாக வந்த தகவலை எடுத்து, தீயணைப்புத்துறையினர் அந்த உடலை அடையாளம் கண்டபோது அது ராஜராஜன் உடல் என அடையாளப்படுத்தப்பட்டது.

அதன்பிறகு அவரதின் உடல் தஞ்சை மாவட்டம் பூதலூர் மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்விற்காக கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்லணை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த க.ராஜராஜனின் நண்பர் அருள் கூறுகையில்; தாங்கள் மது அருந்திய இடம் ஒன்று, அவர் குளித்ததை வீடியோ எடுத்த இடம் ஒன்று, இறந்தவர் அவருடைய செருப்பு கிடந்த இடம் ஒன்று என முன்னுக்குப் பின்னான முரண்பாடான கருத்துக்களை கூறி வருகிறார். இதனால் ராஜராஜன் உடன் அவர்கள் இருவர் மட்டும்தான் சென்றார்களா? அல்லது அவரது உடன் மற்றும் எவரேனும் சென்றுள்ளார்களா? இது இயற்கை விபத்து தானா? இல்லை இதில் ஏதேனும் குற்றப் பின்னணி உள்ளதா? என்பதையும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.