Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மத்திய சிறையில் ஹோமோ செக்ஸ்க்கு அழைத்த காம வெறி பிடித்த கைதி தற்கொலை முயற்சி.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி மத்திய சிறையில்
ஹோமோ செக்ஸ்க்கு அழைத்த காம வெறி பிடித்த கைதி தற்கொலை முயற்சி.

TVK ad

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை
அருகே உள்ள அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 31) இவர் தஞ்சையில் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் 22 வது பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்
அதே சிறை வளாகத்தில் போக்சோ
வழக்கில் கைது செய்யப்பட்ட சில கைதிகளும் அந்த சிறை அறையில் இருந்தனர். அவர்களிடம் ஹோமோ செக்ஸ் வைத்துக் கொள்ள முகமது உசேன் அழைத்துள்ளதாக தெரிகிறது.
இதனால் கோபம் அடைந்த சக கைதிகள் இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சிறைத்துறை அதிகாரி நடவடிக்கை எடுத்து 22 வது பிளாக் இருந்து 10வது பிளாக்கிற்கு முகமது உசேனை மாற்றி அடைத்துள்ளனர்.
அந்த அறையில் தனிமையில் இருந்த முகமது உசேன் மனஉளைச்சலில் நேற்று திடீரென்று அங்கிருந்த
கண்ணாடி துண்டை வாயில் போட்டுக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதைக் கண்டு சக கைதிகள் சத்தமிட்டு அலறினர். இதையடுத்து உடனடியாக சிறை அலுவலர்கள் அவரை மீட்டு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து சிறைத்துறை அதிகாரி சாமிநாதன் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.