டாஸ்மாக் கடையை மூடக்கோரி திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற அமமுகவினர் கைது.
அமமுக நிர்வாகிகள் கைது
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர், டிடிவி தினகரன் அவர்களின் ஆனைகினங்க,
கழக தலைமை நிலைய செயலாளர் தொட்டியம் M. ராஜசேகரன் அவர்கள் வழிகாட்டுதல்படி,
பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறாய் இருக்கும் உறையூர் பகுதி, சீனிவாச நகரில் இயங்கி வரும் மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி
திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ்குமார் தலைமையில்,
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ப. செந்தில்நாதன் முன்னிலையில்,
திருச்சி சீனிவாச நகர் சாலையில் இயங்கி வரும் மதுபான கடையை மூடக்கோரி நடைபெற்ற உண்ணாவிரதம் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
இதனை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு தற்போது திருச்சி உறையூரில் உள்ள அருணா முகூர்த்த திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.