திருச்சியில் அடுத்த என்கவுண்டர் ஐஜேகே நிர்வாகி பட்டறை சுரேஷா?
பிரபல ரவுடி பட்டறை சுரேஷ் குடும்பத்துடன் கைது .
திருவெறும்பூர் போலீசார் துருவி துருவி விசாரணை.
திருச்சியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் கடந்த 19-ந்தேதிபோலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட அந்த 14 ரவுடிகளுக்கு நபர்களுக்கு தொடர்பில்லாத 258 சொத்து ஆவணங்களும், அப்போது கணக்கில் வராத 66 அசல் பத்திரங்களும், பாண்டிச்சேரி மதுவகைகள் 31 பாட்டில்களும் இந்திய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞரணி துணை செயலாளராக உள்ள திருவெறும்பூர் அருகே உள்ள நத்தமாடிப்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடி மைக்கேல் சுரேஷ் என்கிற பட்டறை சுரேஷ் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன. மேற்படி கைப் பற்றப்பட்ட 66 அசல் பத்திரங்களும் சட்டவிரோதமாக கட்டப்பஞ்சாயத்து மூலமாகவும், கந்து வட்டி தொழில் மூலமாகவும் மிரட்டி பெறப்பட்டவை என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் பட்டறை சுரேஷை குடும்பத்துடன் கைது செய்து திருவெறும்பூர்போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் ஆப்ரேஷன் அகழி தொடங்கி தீவிரமாக ரவுடிகளையும், கட்டப்பஞ்சாதையும் ஒழிக்க படும் பாடுபட்டு வரும் திருச்சி எஸ் பி வருண்குமார் பட்டறை சுரேஷ் மீது என்கவுண்டர் நடவடிக்கையை கையில் எடுப்பாரா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு என பொதுமக்கள் கூறுகின்றனர் .