அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் இம்மானுவேல் சேகரனின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவுறுத்தலின்படி,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில்
சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரனின் 67-வது நினைவு நாளை முன்னிட்டு
அவரது திருஉருவ படத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் தலைமையில் மாலை அணிவித்து, மலர்தூவி நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள் பாலசுப்ரமணியன், பாஸ்கர் என்கிற கோபால்ராஜ், தண்டபாணி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் N.கார்த்திக், முன்னாள் மாவட்ட MGR இளைஞர் அணி செயலாளர் சிந்தை முத்துக்குமார், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் M.சுரேஷ்குமார், முன்னாள் மாமன்ற உறுப்பினர் Er. சிங்காரவேலு ராஜா,
முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் ஜெ.பாலமூர்த்தி, வட்ட கழக செயலாளர் அன்புதுரை, KP.சங்கர், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர்கள் கோர்ட் சரவணன், கோதை ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.