திருச்சி தெப்பக்குளம் பஸ் நிறுத்தத்தில் கத்தி முனையில் நகை,பணம் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது. ஒருவர் தப்பி ஓட்டம்.
திருச்சி தெப்பக்குளம் பஸ் நிறுத்தத்தில்
கத்தி முனையில் பயணியை தாக்கி நகை,பணம் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது. -ஒருவர் தப்பி ஓட்டம்.
திருச்சி மாவட்டம் புங்கனூர் மேல தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 52). இவர் திருச்சி தெப்பக்குளம் பகுதிக்கு சொந்த வேலையாக வந்தார். பின்னர் புங்கனூர் செல்வதற்காக திருச்சி தெப்பக்குளம் அருகே பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கத்தி முனையில் இவரை தாக்கி இவரிடம் இருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலி மற்றும் பணத்தை பறித்து சென்று விட்டனர். உடனே இதுகுறித்து ராதாகிருஷ்ணன் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார் .புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிந்துநதி வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் இந்த திருட்டு வழக்கு தொடர்பாக திருச்சி லால்குடி பெருவளநல்லூரை சேர்ந்த பாலாஜி என்கிற மணிகண்டன் என்ற வாலிபரை கோட்டை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர் .மேலும் கம்பரசம்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது .
இந்த திருட்டு வழக்கு தொடர்பாக மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். அவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.