Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாலக்கரை செல்வ விநாயகர் கோயில் குடமுழுக்கு நடத்தாததை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடங்கிய வையாபுரி. இந்து திருக்கோயில் மீட்பு இயக்கத்தின் சார்பில் குடமுழுக்கு நடத்திட தயார் என அறிவிப்பு .

0

 

திருச்சி பாலக்கரை செல்ல விநாயகர் கோவிலுக்கு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் விழா நடத்தாததை கண்டித்து இன்று திருக்கோயில் மீட்பு இயக்கம் சார்பில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்.

திருச்சி பாலக்கரை செல்வ விநாயகர் கோவிலில் கடந்த 32 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. இது குறித்து இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவனத் தலைவர் மகேஸ்வரி வையாபுரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் .

இந்த வழக்கு விசாரணையை மேற்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் உடனடியாக கும்பாபிஷேக விழா நடத்த உத்தரவிட்டது .

உத்தரவு பெற்ற பல மாதங்கள் ஆகியும் இதுவரை கோவிலில் எந்த திருப்பனியும் தொடங்கப்படவில்லை .

இதனை கண்டித்து இந்து திருக்கோவில் மீட்பு இயக்க செயல் தலைவர் வையாபுரி நேற்று கோயில் முன்பு சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் .

இந்தப் போராட்டம் குறித்து தகவல் அறிந்த பாலக்கரை இன்ஸ்பெக்டர் பெரியசாமி, இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் ஜீவானந்தம் ஆகியோர் கோவிலுக்கு விரைந்து வந்து வையாபுரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் .

பேச்சுவார்த்தையில் விரைவில் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து வையாபுரி தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டார் .

இது குறித்து இன்று திருக்கோவில் மீட்பு இயக்க செயல் தலைவர் வையாபுரி கூறிய பொது :-

திருச்சி பெரிய கடை வீதியில் அருள் பாலிக்கும் சொர்ண பைரவர் வகையறா திருக்கோயிலில் ஒன்றான திருச்சி பாலக்கரை சு உய்யக்கொண்டான் வாய்க்கால் வடக்கு பகுதியில் அருள் பாலிக்கும் இந்த செல்வ விநாயகர் கோயில் மிகவும் பழமை வாய்ந்த திருக்கோயில் ஆகும் .

மிகவும் சிதலமடைந்த நிலையில் கடந்த 32 ஆண்டுகளாக குடமுழுக்கு பணிகள் நடைபெறாமல் இருந்து வந்தது.

இது குறித்து கோயிலுக்கு திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு விழா நடத்திட எங்களது இயக்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் WP No 2021 ன் 15163 உத்தரவு நாள் 18.4.2023 உத்தரவு பெறப்பட்டது .

ஆனால் இதுவரை எந்தப் பணியும் தொடங்கப்படாது இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இடையே பெரும் மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது .

எங்களது இயக்கத்தின் சார்பில் பல்வேறு கடிதங்கள் கொடுத்தும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது .

செல்வ விநாயகர் கோவிலுக்கு திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேக விழாவினை அரசு இந்து சமய அறநிலைய துறையின் ஆகம விதியின் படி எங்கள் இயக்கத்தின் சார்பில் செய்து தர தயாராக உள்ளோம் .

குடமுழுக்கு திருப்பனியை எங்களது இயக்கத்தின் சார்பில் முழுமையாக செய்து தர முழு சம்மதம் அளிக்கின்றோம் . மேலும் பிற்காலத்தில் எங்களது இயக்கத்தின் சார்பில் எங்க உரிமையும் கோர மாட்டோம் என உறுதியும் அளிக்கின்றோம் .

செல்வ விநாயகர் கோவிலுக்கு எங்களது இயக்கத்தின் சார்பில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு விழாவினை நடத்தி இந்து சமய அறநிலைத்துறை யிடம் ஒப்படைப்போம் .

மேற்கண்டவற்றை பரிசீரித்து திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கு பணிகள் செய்ய இந்து சமய அறநிலை துறை அனுமதி அளிக்க வேண்டும் எனக்கோரி எங்களது இயக்கத்தின் சார்பில் பல மாதங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பப்பட்டது . ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை .

எனவே எங்கள் இயக்கத்தின் சார்பில் அனுப்பிய கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என இந்து திருக்கோயில் மீட்பு இயக்க செயல் தலைவர் வையாபுரி கூறினார் .

Leave A Reply

Your email address will not be published.