திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் குழந்தைகள் மற்றும் தாத்தா பாட்டி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது .
திருச்சி,
பொன்மலைப்பட்டி செயின்ட் மேரீஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் ஆசிரியர் தினம் மற்றும் தாத்தா பாட்டி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
5-ம் வகுப்பு மாணவி கபிஷிகா வந்திருந்த அனைவரையும் வரவேற்க 4-ம் வகுப்பு மாணவி நேத்ரா நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். பள்ளியின் தாளாளர் எட்வின் பால்ராஜ் முன்னிலையில்
திருச்சி குமுழூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் முதல்வர் வின்சென்ட் டிபால் ( பணி ஓய்வு ) தலைமையில் ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி பள்ளியில் நடைபெறும் செயல்பாடுகளை பாராட்டினார்.
தமிழ்நாடு கூடோ விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் கந்த மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தாத்தா பாட்டிகளுக்கு நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற தாத்தா பாட்டிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். தாத்தா பாட்டி தின விழாவில் கலந்து கொண்ட 50-ம் மேற்பட்ட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
பள்ளியில் நடைபெற்ற ஓவியம், சிலம்பம் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
குழந்தைகள் தங்கள் ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கில மொழியில் கவிதை வாசித்து கேக் வெட்டி, நடனம் ஆடி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
தாத்தா பாட்டி விழாவில் கலந்து கொண்டாடுவது புதுமையாகவும் மிகவும் மகிழ்ச்சியும் அளிப்பதாக கலந்து கொண்ட பெரியவர்கள் தெரிவித்தார்கள். பள்ளியில் அலங்கரித்து வைத்திருந்த தாத்தா பாட்டி தின வளைவில் பேரன் பேத்திகளோடு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
4- ம் வகுப்பு மாணவன் தினேஷ் கார்த்திக் நன்றி கூற வந்திருந்த அனைவருக்கும் தேனீர் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது