லேணா லட்சுமணன் தலைமையில் நாளை வ.உ.சி சிலைக்கு ஊர்வலமாக வந்து மரியாதை. அனைவரும் திரளாக பங்கேற்க அகில இந்திய வஉசி பேரவை இளைஞர் அணி அமைப்பாளர் வையாபுரி அறிக்கை.
ஜாதி மதம் இனம் பார்க்காமல் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 153 வது ஜெயந்தி விழா நாளை இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
இதுகுறித்து அகில இந்திய வ.உ.சி பேரவையின் இளைஞர் அணி அமைப்பாளர் வையாபுரி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
நாளை வ உ சி யின் 153 வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு அகில இந்திய வ உ சி பேரவை தலைவர் லேணா லட்சுமணன் தலைமையில் காலை 10 மணி அளவில் கோர்ட்டுகளில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
முன்னதாக அகில இந்திய வ உ சி பேரவை சார்பாக தென்னூர் உக்கிர காளியம்மன் கோவிலில் அருகே இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஜல்லிக்கட்டு ரோடு வழியாக வ.உ.சி சிலை வந்தடைகின்றனர்.
இந்த நிகழ்வுகளில் மாநில பொருளாளர் வெங்கடாசலம் , பொதுச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி , மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி , மற்றும் மாநில, மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், ஒன்றியம். பேரூர் நிர்வாகிகள், விவசாய அணி நிர்வாகிகள், பொறியாளர்கள் அணி, தொழிலாளர், நிர்வாகிகள் மற்றும் அனைத்து கட்சி நண்பர்கள், நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு வ.உ சிதம்பரனாரின் புகழ்
உலகெங்கும் பரவ அவசியம் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அகில இந்திய வ.உ.சி பேரவை வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்