Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாளை வஉசியின் 153வது ஜெயந்தி விழா. அனைவரும் திரளாக பங்கேற்க அகில இந்திய வ உ சி பேரவை மகளிர் அணி தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி வேண்டுகோள்.

0

 

நாளை வ உ சி யின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற உள்ளது .

திருச்சி கோர்ட் அருகில் அமைந்துள்ள வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர் . இந்த நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு அகில இந்திய வ.உ.சி பேரவை மகளிர் அணி தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

சுதந்திர போராட்ட தியாகியும், செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனாரின் 153வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாளை ஐந்தாம் தேதி வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது .

ஜெயந்தி விழாவில் ஒரு பகுதியாக திருச்சி கோர்ட் அருகில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவ சிலைக்கு காலை 10 மணி அளவில் மாநிலத் தலைவர் லேணா லட்சுமணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது .

இந்த நிகழ்வினை ஒரு சமுதாய தலைவராக பார்க்காமல் தேச தலைவராக பார்க்கின்ற அவருடைய பிறந்தநாள் விழாவில் வ உ சி பேரவையின் மாநில மாவட்ட நிர்வாகிகள் , அனைத்து அணி நிர்வாகிகள் , வழக்கறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள்,. டாக்டர்கள். மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஜாதி மதம் பார்க்காமல் திரளாக கலந்து கொண்டு வ உ சி யின் புகழை உலக அறிய செய்ய ஒன்று கூடுவோம்

என
அகில இந்திய
வஉசி பேரவையின் மகளிர் அணி தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .

Leave A Reply

Your email address will not be published.