திருச்சியில் ஸ்ரீவாரிஸ் ஜோதிட ஆய்வு மையம் சார்பில், முதுகலை பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டது.
பட்டய வகுப்பு
சான்று வழங்கல்
திருச்சியில் ஸ்ரீவாரிஸ் ஜோதிட ஆய்வு மையம் சார்பில், முதுகலை பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு சான்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
திருச்சி, புத்தூர் அருணா திரையரங்கம் பகுதியில் ஸ்ரீவாரிஸ் ஜோதிட ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழக, ஜோதிடவியல் துறையின் மேநாள் ஒருங்கிணைப்பாளரும் ஓய்வு பெற்ற போராசிரியருமான எம். ராஜதுரை தலைமையில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர் பேராசிரியர் ராஜதுரைமூலம் ஜோதிட ஆய்வு பட்டம், முதுகலை மற்றும் இளங்கலை பட்டம் மற்றும் பட்டயங்களை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு முதல் பிரிவு [பேஜ்] ஜோதிடவியல் பட்டய (டிப்ளமோ) வகுப்புகள் பிப்ரவரி தொடங்கி ஆகஸ்ட் 24 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றுள்ளது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று வழங்கும் நிகழ்ச்சி, ஆய்வு மைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ஆய்வுமைய இயக்குநரும் ஓய்வு பேராசிரியருமான எம். ராஜதுரை மாணவ, மாணவியருக்கு சான்றுகளை வழங்கினார். தொடர்ந்து அவருக்கு மாணவ, மாணவியர் சார்பில் நினைவுப்பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாணவ, மாணவியர் செய்திருந்தனர்.