Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

24 மணி நேரமும் கிடைக்கும் போலி மது மற்றும் போதை வஸ்துகள். கள்ளக்குறிச்சி போன்று துர் சம்பவம் நடைபெறும் முன் நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி அமமுக மாநகர செயலாளர் செந்தில்நாதன் கலெக்டரிடம் மனு .

0

'- Advertisement -

மாவட்ட ஆட்சியரிடம் திருச்சி மாநகர் அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மனு.

திருச்சி மாவட்ட ஆட்சியரிடம், திருச்சியில் பெருகிவரும் போதை மருந்து மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி (இரவு 10 மணி முதல் அடுத்த நாள் மதியம் 12 மணி வரை ) விற்கப்படும் போலி மதுபானங்கள் பற்றி, திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அம்மனுவில், திருச்சியில் கிட்டத்தட்ட பெரும்பாலான இடங்களில், அரசு அனுமதிக்கபட்ட நேரத்தை தாண்டியும், பல பார்களிலும் மதுபானங்கள் கிடைக்க பெறுகின்றன. எந்தவித கட்டுப்பாடுமின்றி, சட்டத்திற்கு புறம்பாக விற்கப்படும் இவ்வகை மதுக்களில் பெரும்பாலானவை போலி மதுபானங்கள் என்று கூறுகின்றனர்.

Suresh

அதே போல், மதுபானங்கள் மட்டுமல்லாது, இளைஞர்களை சீரழிக்கும் பல போதை வஸ்துக்களும் திருச்சியில் தடையின்றி கிடைப்பதாக பத்திரிக்கை செய்திகளிலும் வந்துள்ளன.

எனவே கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற துர்சம்பவம் போல், திருச்சியிலும் நடைபெறுவதற்கு முன், போதை மருந்து விற்பவர்களை மற்றும் அனுமதிபட்ட நேரத்தை தாண்டி மதுபானங்கள் விற்கும் பார்கள் மீதும் இரும்பு கரம் கொண்டு அடக்கி, விரைந்து, கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.