Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் சார்பில் புதிதாக பணியாமத்தப்பட்ட ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

0

திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தின் உள்புகார் குழு (ஐசிசி) புதிதாக பணியமர்த்தப்பட்ட 127 ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு (பாஸ்) பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

பாதுகாப்பான மற்றும் மரியாதையான பணியிட சூழலை உருவாக்குவது மற்றும் பராமரிப்பது குறித்து ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இந்த நிகழ்வு.

ஐசிசி தலைவர் டாக்டர் கலைச்செல்வி ஐசிசி மற்றும் அதன் நோக்கங்களை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினர். அன்றைய விருந்தினர் அட்வகேட் மற்றும் பாஷ் பயிற்சியாளர் ஆன பாஸ் சட்டம் ஐ பி சி மற்றும் வழிகாட்டுதல்கள் ஆழமான விவாதத்தை வழங்கினார்.

பணியிடத்தில் எந்த ஒரு பாலியல் துன்புறுத்தலையும் தடுப்பதற்கும் தடை செய்வதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை அவர் வழங்கினார்.

என்.ஐ.டி திருச்சி இயக்குனர் டாக்டர் ஜி அகிலா பெண்களுக்கான பாதுகாப்பான பணியிடத்திற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தியதுடன் அனைத்து பங்குதாரர்களுக்கும் வழக்கமான விழிப்புணர்வு அமர்வுகளில் ஊக்குவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பாலியல் வன்கொடுமை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டிகளை ஆசிரியர் நல முதல்வர் டாக்டர். குமரேசன், பதிவாளர் டாக்டர் என். தாமரைசெல்வன், தலைமை விஜிலென்ஸ் அதிகாரி டாக்டர் டி என் ஜானகிராமன், தலைமை விருந்தினர் அட்வகேட் கோகிலா வெளியிட்டனர்

Leave A Reply

Your email address will not be published.