மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் நாளை (ஜூலை 10) குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கம்பரசம் பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீா்ப்பணி நிலையம், டா்பன் நீரேற்று நிலையம், பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம், அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையங்களிலிருந்து மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீா் விநியோகம் ஜூலை 10 ஆம் தேதி இருக்காது.
எனவே, அன்றைய தினம் மாநகராட்சி பகுதிகளில் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.
ஜூலை 11 ஆம் தேதி முதல் வழக்கம்போல் குடிநீா் விநியோகிக்கப்படும்.