திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே துர்கா ஸ்டாலினை அழைக்க சென்ற அமைச்சரின் கார் விபத்தில் சிக்கியது.
இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தர இருந்த அந்த பயணம் ரத்தானது .
அதே நேரம் இந்த பயணத்தில் அவருடன், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களும் வருவதாக கூறப்பட்டது . இந்த சூழலில், அவரை திருச்சி விமான நிலையத்தில் இருந்து, புதுக்கோட்டை அழைத்து செல்ல வந்த அமைச்சர் கே என் நேருவின் கார், திருச்சி தலைமை தபால் நிலைய சிக்னல் அருகே சென்ற ஆட்டோவில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விபத்துக்குள்ளான காரை கிரேன் மூலம் போக்குவரத்து காவல் துறையினர் மீட்டுள்ளனர்.